seriyal actress srithika acting mother character
கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் ஷக்தி மற்றும் சந்தியா நடித்து வெளியான, 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரிதிக்கா.
இந்த படத்தை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, 'கலசம்' சீரியலிலும் கால் பதித்தார். மேலும் இதுவரை 'வெண்ணிலா கபடி குழு' , 'வேங்கை' ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும். பல சீரியலில் நாயகியாக நடித்துள்ளார்.
இதுவரை நாதஸ்வரம், குலதெய்வம் சீரியல்களில் என தொடந்து சீரியல்களில் இளம் கதாநாயகியாக நடித்து வந்த இவர், கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் அம்மா நடிகையாக மாறிவிட்டார்.
இதை பார்த்து ரசிகர்களே மிகவும் ஷாக் ஆகிவிட்டனர். ஏன் இவர் இப்படி ஒரு முடிவெடுத்தார்? மார்க்கெட் போய்விட்டாதா என சிலர் சந்தேகத்தை எழுப்புயிருக்கிறார்கள். அதற்காக இவர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்... குலதெய்வம் சீரியல் முடிந்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்தேன் ஆனால் அம்மா கேரக்டர் வாய்ப்பு தேடி வந்தது. இது மிகவும் அழுத்தமான கதாப்பாத்திரம், கதையை கேட்டதுமே பிடித்து விட்டது. அதனால் விடவேண்டாம் என ஓகே சொல்லிவிட்டேன்.
சீரியல்களில் அம்மா, மாமியார் ரோல்கள் தான் வெயிட்டாக இருக்கும். கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் அம்மா கேரக்டர் கிட்டத்தட்ட ஹீரோயின் போல தான் என கூறியுள்ளார்.
