கன்னடத்தில்,' மகாநதி', 'மதுபாலா', 'திரிவேணி சங்கமம்' ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர்கள்  பிரபல சின்னத்திரை நடிகை ரச்சனா மற்றும் நடிகர் ஜீவன். இவர்கள் பெங்களூவில்  உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும், தங்களுடைய நண்பர் கார்த்திக்கின் பிறந்தநாளை, கொண்டாட பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில்,மகடி  என்ற இடத்தில் அமைந்துள்ள  குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு சென்றனர்.

அப்போது  எதிர்பாராத விதமாக, கார் சென்றுகொண்டிருக்கும்போது நிலைதடுமாறி பாதுகாப்பு சுவர் மீது மோதிய விபத்தில்,  இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் மேலும் இவர்களுடன் சென்ற நண்பர்கள் படுகாயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.