கடந்த சில வருடங்களாக சின்னத்திரை கலைஞர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட தொலைக்காட்சி நடிகை மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'சுமங்கலி' என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த பிரதீப் என்ற நடிகர் திடீரென நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவருக்கு வயது 32 .

பிரதீப் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.