சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான பாலா அவர்கள் தொடர்ச்சியாக பல பொதுநல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஈரோடு மாவட்டம் கடம்பூர் பகுதியில் உள்ள குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஒரு ஆம்புலன்ஸை இலவசமாக வழங்கியுள்ளார் நடிகர் பாலா அவர்கள். குன்றி உள்ளிட்ட அந்த 18 மலை கிராமத்தில் சுமார் 7500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஒன்று சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது, அல்லது கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் பாம்பு கடி போன்ற சில அவசர சிகிச்சைகள் பெற வேண்டிய நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லாத காரணத்தினால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த 18 கிராம மக்கள் உடனடியாக மருத்துவ சேவையை பெற்றிட நடிகர் பாலா அவர்கள் ஒரு மினி ஆம்புலன்ஸ் ஒன்றை அந்த மக்களுக்காக வழங்கி சிறப்பித்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் அவர்கள் அந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை தூங்கி வைத்து பாலாவை பாராட்டி பேசினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பாலா, அவதிப்படும் மக்களுக்கு ஒரு அத்தியாவசிய தேவையை கொடுத்ததில் மிக மகிழ்ச்சி அடைகிறேன் என்றும். தன்னால் இயன்ற அளவு இது போன்ற பல உதவிகளை மக்களுக்கு தொடர்ச்சியாக செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
விஜய் டிவியின் மூலம் புகழ்பெற்ற பாலா அவர்கள் தொடர்ச்சியாக பல உதவிகளை செய்து வருவதை நாம் அறிவோம். அண்மையில் பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவ லாரன்ஸ் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பாலா அவர்களிடம் கொடுத்து, அவருடைய சமூக சேவைக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் பாலா நல்ல திரைப்படங்களுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
'ரோமியோ' படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டோனி! இவரின் ஜூலியட் யார் தெரியுமா?
