விஜய் டிவியில், 'பகல் நிலவு' மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.  இளம் வயதிலேயே கதாநாயகியாக மாறி இவருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் சில சர்ச்சைகளில் சிக்கியதால், விஜய் டிவியில் இவர் நடித்து வந்த 'கடைக்குட்டி சிங்கம்' சீரியலில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து தற்போது 'இரட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,தற்போது ஷூட்டிங் வீட்டிலேயே முடங்கி இருக்கும் இவர், மிகவும் ஜாலியாக தன்னுடைய பொழுதை கழித்து வருகிறார்.

அந்த வகையில் தளபதியின் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற, வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பராக குத்தாட்டம் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் லைக்குகளை அள்ளுகிறது.


 

View this post on Instagram

Vaathi Coming 🏠❤️ .. 1/21

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on Mar 25, 2020 at 5:13am PDT