இந்தி சீரியல்களில் நடித்து வந்த சேஜல் சர்மா என்ற நடிகை கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேஜல் சர்மா சீரியல்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து மும்பையில் தங்கியுள்ளார். இவர் நடித்த “தோ ஹாப்பி ஹை ஜி” என்ற தொடர் சூப்பர் ஹிட்டடிக்க, தொடர்ந்து சீரியல், விளம்பரம், வெப் சீரிஸ் என பிசியாக வலம் வந்துள்ளார். 

 

இதையும் படிங்க: டீப் நெக் ஓபனில் கவர்ச்சி அதிர்ச்சி... வைரலாகும் யாஷிகா ஆனந்தின் ஓவர் தாராளம்...!

இந்நிலையில் 25 வயதே ஆன சேஜல் சர்மா திடீரென தற்கொலை செய்து கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் வீட்டில் இருந்து சிக்கிய கடிதத்திலும், தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் தனிப்பட்ட காரணத்துக்காகத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகக் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அம்மா தனது மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்க, மும்பை போலீசார் விசாரணையில் இறங்கினர். 

 

இதையும் படிங்க: ரஜினியைத் தொடர்ந்து அஜித்... கருப்பு மாஸ்குடன் காரில் குடும்பத்துடன் பயணிக்கும் வீடியோ...!

அப்போது ஆதித்யா வசிஷ்ட் என்பவருடன் சேஜல் தொடர்ந்து போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா சேஜலின் காதலின் என்றும், பில்லி சூனியம் செய்து அவரை பிரபலமாக்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. காதலர் செய்த பண மோசடியால் மன உளைச்சலில் இருந்த சேஜல் சர்மா தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சேஜல் சர்மாவின் காதலர் ஆதித்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.