பிச்சை எடுத்து பொழச்சுக்கோன்னு சொன்னாரு! விஷ்ணுகாந்த் சொல்வது அப்பட்டமான பொய்.. வெளுத்து வாங்கிய சம்யுக்தா!
சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த கூறியதற்கு, அவரின் மனைவியும் நடிகையுமான சம்யுக்தா பதிலடி கொடுத்துள்ள விஷயங்கள் தற்போது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரை நட்சத்திர ஜோடியான விஷ்ணுகாந்த் - சம்யுக்தா திருமண விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த போது, உருகி உருகி... காதலித்த சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் கடந்த மார்ச் மாதம், திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரே மாதத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்துள்ளனர். இது தற்போது தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது. சமீபத்தில் தங்களுடைய பிரிவு குறித்து, சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் பிரபல ஊடகம் ஒன்றில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீரியல் நடிகை சம்யுக்தா லைவில்... விஷ்ணுகாந்த் பேசிய பல விஷயங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகின்றன.
வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி!
இந்த லைவில், 'தனக்கும் விஷ்ணு காந்துக்கும் மார்ச் மூன்றாம் தேதி திருமணமானதாகவும், மார்ச் எட்டாம் தேதி சென்னைக்கு வந்ததாக கூறி உள்ள சம்யுக்தா... அதுவரை ஈரோட்டில் உள்ள விஷ்ணுகாந்தின் வீட்டில் தான் இருந்தோம் என தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் மூன்றாம் தேதி வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். சரியாக ஒரு மாதம் மட்டுமே அவருடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் ஒன்றாக சென்னையில் இருந்த போது, அவருக்கு இரண்டு நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருந்தது. எனக்கு மூன்று நாட்கள் ஷூட்டிங் இருந்தது. இதைத் தவிர மற்ற நாட்கள் இருவருமே வீட்டில் தான் இருந்தோம். வேலை என்று எதுவும் இல்லை. ஆனால் விஷ்ணுகாந்த் 15 நாட்கள் ஷூட்டிங் இருந்தது என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் என்று தெரிவித்துள்ளார்".
இதைத்தொடர்ந்து தன்னுடைய தந்தை குறித்து விஷ்ணுகாந்த் கூறியுள்ள தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ள சம்யுக்தா, "இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது நபர் என் தந்தை தான். ஒரு கட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் என்னுடைய அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அப்பாவுடன் செல்லனுமா? அம்மாவுடன் செல்ல வேண்டுமா என வந்தபோது என்னுடைய அப்பா மீது தவறு இருந்ததால்... நான் என்னுடைய அம்மாவுடன் செல்ல முடிவு செய்தேன். அப்போது உனக்கு 18 வயசு ஆயிடுச்சு இல்ல, பிச்ச கூட எடுத்து பிழைச்சுக்கோ என என் தந்தை கூறியது என்னை மிகவும் பாதித்தது. எனவே அப்படி சொன்னவர் முன்பு நன்றாக வாழ வேண்டும் என்றும் என்னுடைய சொந்த காலில் நிக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது வரை அப்படித்தான் வாழ்ந்து வருகிறேன். என தார தாரையாக கண்ணீரை விட்டு கதறி அழுதுள்ளார்.
மேலும் தற்போது பிரச்சனை எனக்கும் விஷ்ணுகாந்துக்கும் மட்டுமே நடக்கிறது. ஆனால் விஷ்ணுகாந்த் என்னுடைய அப்பா பற்றி பேசி இருக்க வேண்டாம். அது என்னுடைய பர்சனல். இதுபற்றி பேசி உங்களுக்கு என்ன வரப்போகிறது. என்னுடன் பிரச்சனை என்றால் என்னை பற்றி மட்டும் பேசுங்கள் என பதில் கொடுத்துள்ளார். அதே போல் என்னுடைய அம்மா மணி மயின்ட்என நான் அவரிடம் கூறியதாக சொல்கிறார். ஆனால் நான் சொன்னது வேறு, சில சமயங்களில் என் அம்மா மாதக் கடைசியில் வீட்டில் மளிகை பொருள் இல்லை, ஏதாவது வாங்க வேண்டும் என சொல்வார். அப்போது சில சமயங்களில் நான் அவரிடம் சண்டை போட்டு என்னிடம் காசு இல்ல என திட்டி விடுவேன். இது எப்போதுமே எல்லார் குடும்பத்திலும் ஒரு அம்மாவுக்கும், மகளுக்கும் இருக்கும் சாதாரண பிரச்சனை தான். அவங்க கேட்ட விஷயமும் சரியானது தான், ஆனால் நான் அவரிடம் ஷேர் செய்து கொண்ட இந்த விஷயத்தை கூட தவறாக எடுத்து கொண்டு பேசியுள்ளார் என லைவில் கலக்கியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ இதோ...