இயக்குனர் சுந்தர்.சி, இயக்கத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நந்தினி' சீரியலில் கவர்ச்சிகரமாக சேலை கட்டி நடித்து, ரசிகர்களை கவர்ந்து இழுந்தவர் நடிகை நித்யா ராம்.

இந்த சீரியலை அடுத்து, டான்ஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகை வாணி போஜனுடன் சேர்ந்து கலந்து கொண்டார். 

இந்நிலையில் இவர், கௌதம் என்பவரை காதலித்து கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து வெளிநாட்டில் செட்டில் ஆக உள்ளதாகவும், இதனால் இவர் சின்னத்திரையை விட்டு விலக உள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் அடிக்கடி தன்னுடைய திருமண புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த இவர், தற்போது தன்னுடைய திருமண டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

வைரலாகும் வீடியோ இதோ...