சின்னத்திரை நடிகை ஒருவர், ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, சீரியல் துணை இயக்குனரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி அருகே, சின்னத்திரை நடிகை ஒருவர் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்யவிருந்த நிலையில், இந்த உண்மை தெரிந்ததால் அவரது காதலரும், உதவி இயக்குனருமான நவீன் தகராறு செய்தத்துள்ளார். இவரை சின்னத்திரை நடிகை ஜெனிபரின் உறவினர்கள் சிலர் தாக்கியதை தொடர்ந்து, போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மணலி அருகே உள்ள பல்ஜிபாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் நடிகை ஜெனிபர். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே, திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரிடம் இருந்து பிரிந்து குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

பின்னர் தற்போது இவர் நடித்து வரும் சீரியலில் துணை இயக்குனராக பணியாற்றிவரும், நவீன் என்பவருக்கும் ஜெனிபருக்கும் இடையே உண்டான நட்பு, காதலாக மாறியுள்ளது. ஜெனிபர், நவீனிடம் தன்னுடைய முதல் திருமணம் குறித்து எதையும் கூறாமல், இரண்டாவது திருமணத்திற்கும் தயாராகியுள்ளார். திருமண நெருக்கத்தில், ஜெனிபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறித்த தகவல் நவீனுக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்துள்ளார். 

ஏமாற்றப்பட்ட அதிருப்தியில். நவீன்குமார் ஜெனிபரின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஜெனிபரின்  குடும்பத்தினர் நவீனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நவீன்குமார் குடும்பத்தினர் ஜெனிபரின் தந்தை வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இருதரப்பினர்களும் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.