சமீபத்தில் தான் பிரபல நடிகை சங்கீதாவின் தாய், தன்னை பெற்ற மகளே வீட்டை விட்டு அனுப்பிவிட்டார் என்கிற விஷயத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகையும் தொகுப்பாளியுமான, தேவி கிருபாவின் தாய் மதுரவாயல் காவல் நிலையத்தில், தன்னுடைய மகள் இறந்து விட்டதாகவும், இனி தனக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளதாக எழுதி கொடுத்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'ஆனந்தம்' சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவி கிருபா. இவருக்கு சின்னத்திரையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது 'தென்றல்' சீரியலில் இவர் நடித்த புஜ்ஜிமா கதாப்பாத்திரம். தற்போது 'கல்யாண பரிசு'  சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இவரின் அம்மா ஸ்வாதி கிருபா, மதுரவாயல் காவல் நிலையத்தில் தனக்கு இனி ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளதாகவும், மகள் இறந்துவிட்டதாகவும் கூறி புகார் கொடுத்த பின் பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில்...

தன்னுடைய மகள் சின்னத்திரையில் அறிமுகமானத்தில் இருந்து, அவரின் வளர்ச்சிக்காக கடந்த 10  ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டுள்ளேன். அதே போல் தன்னுடைய மகன் கோகுலும், அவருக்கு டிரைவர் போல் இருந்துள்ளார். ஆனால் தேவி கிருபா இதையெல்லாம் மறந்து, தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், தற்போது ஐயப்பன் தங்களில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு தெரிந்த டான்ஸ் மற்றும் யோகா கைகொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேவி கிருபா கூறுகையில்... மூத்த மகளாக பிறந்து, 14 வயதில் இருந்து இந்த குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். ஆனால் தன்னுடைய தாய் பலமுறை தன்னிடம் லட்ச கணக்கில் பணம் வாங்கி, தற்போது வரை அதற்கான கணக்கு மற்றும் காரணத்தை கூறியது இல்லை. என்னுடைய எதிர்காலம் பற்றியும் அவர் எதையும் யோசித்தது இல்லை. பல முறை அவர் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக கூறியுள்ளார்.

அதே போல், தேவி கிருபாவின் சகோதரர், நடுநிலையாக பேசியதுடன் தன்னுடைய தாய் மீது தவறு இருந்தும் அவர் அதை ஒரு முறை கூட உணர்ந்தது இல்லை. அவருக்கு தேவைக்கான பணத்தை நான் அவரிடம் கொடுத்ததும் இப்படி தன்னுடைய தாய் நடந்துகொள்வது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.