பிரபல டிவி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சாந்தனா என்பவர், காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: அரை நிர்வாண போட்டோ வெளியிட்ட கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹாசின்! அத்து மீறும் கவர்ச்சி அட்டகாச கிளிக்ஸ்!
 

பிரபல கன்னட தொலைக்காட்சியில் தொகுப்பாளராகும், ஒரு சில சீரியல்களிலும் நடித்து வந்தவர் சாந்தனா. 29 வயதாகும் இவர், கடந்த 5 வருடங்களாக தினேஷ் என்பவரை மனதார காதலித்து வந்துள்ளார். இருவரும் பழகி வருவதை அறிந்த, பெற்றோர் இவர்களுடைய திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திடீர் என, இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணம் செய்து கொள்வதாக, சாந்தனாவை நம்ப வைத்து அவரை பயன்படுத்தி கொண்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார் 
 தினேஷ்.  காதலன் ஏமாற்றியதால் மன வேதனை அடைந்த, சாந்தனா விஷம் குடித்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். 

மேலும் செய்திகள்: 77 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் இளையராஜா! இசை பயணத்தில் மறக்க முடியாத அரிய புகைப்பட தொகுப்பு!
 

இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தியபோது, சாந்தனா.... விஷம் அருந்தி கொண்டே பேசிய வீடியோ ஒன்று கிடைத்தது. இதில் தன்னுடைய மரணத்திற்கு காரணம், காதலர் தினேஷ் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை வைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் உடையில்... சிம்புவுடன் ரொமான்ஸ் செய்த சமந்தா! தீயாய் பரவும் புகைப்படம்!
 

மேலும், முதல் கட்ட விசாரணையில்... சாந்தனாவிடம், கடந்த 5 வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தினேஷ் ரூபாய் 5 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்தது தெரியவந்துள்ளது. பணத்தையும் இழந்து, மனதையும் பறிகொடுத்து, காதல் கனவு நிறைவேறாததால் சாந்தனா உயிரை விட துணிந்து விட்டார். இந்த சம்பவம் தற்போது கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.