கிராமத்து மனம் கமழும், இனிமையான பாடங்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி  தம்பதியினர்.

புதுக்கோட்டை மாவட்டதை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களான இவர்களை உலகம் முழுவதும் அடையாள படுத்தியது,  விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி தான்.

கணவன், மனைவியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்களுக்கு தற்போது மவுசு எங்கேயோ போய் விட்டது. இந்த நிகழ்ச்சியில் முடிவில்  சூப்பர் சிங்கர் படத்தையும், 50 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் பரிசாக பெற்றார் செந்தில் கணேஷ். மேலும் வெளிநாடுகளுக்கு சென்று, நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். அதே போல் திரைப்படங்களில் பாடுவதிலும் இருவரும் பிஸியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய மகள் பிறந்த நாளை முன்னிட்டு செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகள் தங்களுடைய சொந்த ஊரில், பிரமாண்டமான கறி விருந்து வைத்து மகள் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

 

இதுகுறித்து செந்தில் கணேஷ் ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளது என்னவென்றால்...  இன்று மூன்றாவது தாய்க்கு இரண்டாவது பிறந்த நாள். என் தாய் கிராமமான களபத்தில் தான் விழா, கறிவிருந்தோடு. அனைவரும் வருக என அறிவித்துள்ளார். 

இதனை பார்த்து ரசிகர்கள் பலர் செந்தில் கணேஷ் மகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.