மீண்டும் 'கல்யாணத்தில்' இணைந்த செந்தில், ஸ்ரீஜா...!
ரேடியோவில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி சீரியல், திரைப்படம் என கலக்கியவர் செந்தில். இவர் பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2007 முதல் 2009 வரை நடித்த சரவணன் மீனாட்சி என்கிற சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீஜா. எப்படி வெள்ளித்திரையில் சூர்யா ஜோதிகா ஜோடிகளுக்கு ரசிகர்களிடம் தற்போது வரை மிகப் பெரிய வரவேற்பு உள்ளதோ அதே போல் இந்த ஜோடிக்கும் சின்னத்திரையில் மவுசு அதிகம்.
இவர்கள் இருவரும் உண்மையில் இணைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தது போலவே இருவரும் உண்மையில் திருமணமும் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பின் 'மாப்பிள்ளை' என்கிற சீரியல் மூலம் ரீ - என்ட்ரி கொடுத்த இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இவர்கள் மீண்டும் ஒரு வெப் சீரிஸ்க்காக இணைந்து நடிக்க உள்ளனர். இந்த சீரிஸ்க்கு கல்யாணம் என பெயர் வைத்துள்ளார்களாம். இந்த சீரீஸ் இன்று முதல் பிரபல வானொலி வலைத்தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது