Asianet News TamilAsianet News Tamil

மஹத் மாதிரி நானும் வெளியே போகனுமா? மன்னிப்பு கேட்டு மும்தாஜை வம்புக்கு இழுக்கும் சென்றாயன்!

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த மாதம் இறுதியில் நிறைவடைய இருக்கிறது. சென்றாயன், ஜனனி, மும்தாஜ், பாலாஜி, விஜயலஷ்மி, ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா இந்த 7 பேரில் எப்படியும் மூன்று பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்திற்கு முன்னரே எலிமினேட் ஆகி விடுவார்கள். அதிலும் ஐஸ்வர்யாவை தான் இந்த வாரம் கட்டம் கட்டி தூக்க காத்திருக்கின்றனர் போட்டியாளர்கள். 

senryan and mumtaj intresting fight
Author
Chennai, First Published Sep 6, 2018, 6:40 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த மாதம் இறுதியில் நிறைவடைய இருக்கிறது. சென்றாயன், ஜனனி, மும்தாஜ், பாலாஜி, விஜயலஷ்மி, ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா இந்த 7 பேரில் எப்படியும் மூன்று பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்திற்கு முன்னரே எலிமினேட் ஆகி விடுவார்கள். அதிலும் ஐஸ்வர்யாவை தான் இந்த வாரம் கட்டம் கட்டி தூக்க காத்திருக்கின்றனர் போட்டியாளர்கள். 

நாட்கள் நெருங்கி கொண்டே இருப்பதால் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யம் இப்போது தான் கூடி இருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் லிஸ்டில் ஐஸ்வர்யா, சென்றாயன் , மும்தாஜ், விஜயலஷ்மி, ஆகிய நான்கு பேரும் இருக்கின்றனர். இதில் பிக் பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க் மூலம் யார் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று வேறு தெரியவில்லை. 

senryan and mumtaj intresting fight

சென்ற முறை இருந்த போட்டியாளர்களை விட மிகவும் தந்திரமாகவு, ஜாக்கிரதையாகவும் இருக்கின்றனர் இந்த சீசன் 2 போட்டியாளர்கள். சமீபத்திய பிரமோவின் போது பிக் பாஸ் வீட்டில் வைத்து மும்தாஜை புகழ்வது போல குத்தலாக பேசுகிறார் சென்றாயன். எனக்கு எதுவும் தெரியாது தெரியாதுனு சொன்னாங்க மும்தாஜ் ஆனால் இப்போது நானும் கத்துக்கிட்டிருக்கேன் என்பது போல உரையை முடித்திருக்கிறார். 

senryan and mumtaj intresting fight

சென்றாயனின் வஞ்சப்புகழ்ச்சி அணியை புரிந்து கொண்ட மும்தாஜ் அவரிடம் இது தப்பு என கூறுகிறார். தொடர்ந்து மும்தாஜிடம் நான் தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க என்றும் கேட்கிறார். அப்போது மும்தாஜ், இப்படி தான் மகத் பேசினார் அது மாதிரி இப்போ நீங்க பேசிட்டு இருங்க நான் கேட்டிட்டிருக்கேன் என கூறி இருக்கிறார். 

senryan and mumtaj intresting fight

இதை கேட்ட சென்றாயன் அந்த வார்த்தை சொன்னதால தான், அவன் வெளியே போய்ட்டான். இப்போ நானும் போகனுமா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
 ஒருவேளை மகத் வெளியேற மும்தாஜ் தான் காரணம் என சக போட்டியாளர்கள் நினைக்கிறார்கள் போல. அதனால் தானோ என்னவோ தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் பலரும், மும்தாஜ் மீது கடுப்பிலேயே இருக்கின்றனர். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது இனி வரும் வாரங்களில் தான் தெரியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios