பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம், யாரும் எதிர்ப்பார்க்காத போட்டியாளர் சென்றாயன் வெளியேற்றப்பட்டர். இவர் வெளியேற்றப்பட்டதும், அதிக ஓட்டுகள் பெற்று ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதும், பிக்பாஸ் ரசிகர்களால் தற்போது வரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஒருவேளை சென்றாயனுக்கு பதிலாக மும்தாஜ், அல்லது விஜி ஆகிய இருவரின் ஒருவர் வெளியேறி இருந்தால் கூட மக்கள் இவ்வளவு ஆதங்கப்பட்டிருப்பர்களா என தெரியவில்லை?   பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்டதால், ரசிகர்கள் சிலர், தங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது இருந்த நம்பிக்கையே போய் விட்டதாகவும், ஐஸ்வர்யாவை காப்பாற்ற வேண்டும் என்றே சென்றாயன் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய கருத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், தற்போது சென்றாயன் வெளியேறும் முன் திரைக்கு பின் நடந்த ரகளை வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரில் சென்று பார்த்த சிலர் இந்த தகவலை பகிர்ந்துள்ளனர். அதன் படி, அன்றைய தினம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு நிகழ்ச்சியாளர்களுடன் கமல் நீண்ட நேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், கடைசி நேரத்தில் சென்றாயன் பெயரை கூறி விட்டு அந்த கார்டை கோபத்தில் தூக்கி எரிந்ததாகவும் கூறியுள்ளனர்.

அதே போல் கடந்த வார நிகழ்ச்சியில், ஐஸ்வர்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை அலற வைத்து விட்டாராம். ஆனால் சில காட்சிகள் மட்டும் தான் டிவி நிகழ்ச்சியில் காட்டப்பட்டதாகவும், பெரும்பாலான காட்சிகள் எடிட்டிங் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், கடந்த வாரம் கமலின் விருப்பம் இல்லாமலேயே சென்றாயன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது இவர்கள் கூறியதில் இருந்து தெளிவாக தெரிகிறது. இதனால் இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என சில ரசிகர்கள் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது . மேலும் கமல் சென்றாயனுக்கு நிகழ்ச்சியாலர்களிடம் பேசி கூடுதல் பேமென்ட் வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.