ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  உருவாகி வரும் 'தர்பார்' படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் கோலிசோடா படத்தில் முரட்டு வில்லனாக நடித்த மலையாள நடிகர்  செம்பான் வினோத் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியது.

இந்த தகவலை செம்பான் வினோத் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தர்பார்' படத்தில் நான் நடிக்க உள்ளதாக வெளியான தகவல், முற்றிலும் வதந்தி. 'தர்பார்' படம் பற்றி ரசிகர் ஒருவர் உருவாக்கியிருந்த போஸ்டர் எனக்கு பிடித்திருந்ததால், அதனை  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன்.

அதை பார்த்து,  இந்த படத்தில் நான் நடிக்க உள்ளதாக ரசிகர்கள் சிலர் தவறாக எடுத்துக் கொண்டனர் என செம்பான் வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தற்போது அந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இருந்த நீக்கிவிட்டதாகவும்,  ஆனால் ரசிகர்கள் எண்ணம் போல் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது தன்னுடைய அதிர்ஷ்டம் என் கூறியுள்ளார்.  இந்த வதந்தி  உண்மையாகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.