ஹிட் படங்களை மட்டுமல்ல, சமீபகாலமாக தனுஷின்’ மாரி 2’ போன்ற அட்டர்ஃப்ளாப்பான படங்களையும் பார்ட் 2 வாக எடுக்கும் ஒரு வியாதி தமிழ்சினிமாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. 

தம்பியின் வழியில் தானும் செல்லலாம் என்று நினைத்தாரோ என்னவோ ஏற்கனவே தான் இயக்கி படுதோல்வி அடைந்த, தயாரிப்பாளர்களை இருக்கும் இடமே தெரியாமல் ஆக்கிய தனது இரண்டு படங்களை மீண்டும் இயக்கவிருப்பதாக ட்விட்டர் மூலம் மிரட்டல் விடுத்திருக்கிறார் செல்வராகவன். நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பக்கத்தில்... வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை  2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர்.

 

நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்... என்று கமல் பாணியில் கவித்துவமாக ஒரு  பதிவு போட்டுள்ளார். 

அதற்கு முதல் ஆளாய் ஒரு தீவிர தமிழ்சினிமா ரசிகர் போட்டதுதான் இச்செய்தியின் தலைப்பு. செல்வராகவன் பார்ட் 2 தயாரிக்க விரும்பும் படங்களின் முதல் பாகத் தயாரிப்பாளர்களான லட்சுமி மூவி மேக்கர்ஸ்[புதுப்பேட்டை] ட்ரீம் வேலி வாரியர்ஸ் [ஆயிரத்தில் ஒருவன்] ஆகிய இரு நிறுவனங்களுமே இண்டஸ்ட்ரியை விட்டு துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிவிட்டார்கள் என்பது நிதர்சனம்.