Asianet News TamilAsianet News Tamil

'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்துக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

ஒவ்வொரு வருடமும், சிறந்த இலக்கிய படைப்புகளை கவுரவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருதுகளை, மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இம்முறை 20 மொழிகளை சேர்ந்த சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
sellathapanam novel won the sahitya academy award
Author
Chennai, First Published Mar 12, 2021, 5:22 PM IST

ஒவ்வொரு வருடமும், சிறந்த இலக்கிய படைப்புகளை கவுரவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருதுகளை, மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இம்முறை 20 மொழிகளை சேர்ந்த சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து சிறந்த, நாவல், சிறுகதை, புனைவு (புனைவில்லாத),  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.  இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் இமையம் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sellathapanam novel won the sahitya academy award

இவர் எழுதிய 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக 2020 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இவ்விருதை பெறுபவர்களுக்கு,  தாமிர பட்டயம், மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ள, தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் இமையத்துக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

sellathapanam novel won the sahitya academy award

மேலும் இவர் தனக்கு 1994 ம் ஆண்டே, இவ்விருது கிடைத்து இருக்க வேண்டும்.காலம் தாழ்ந்து கிடைத்துயிருக்கிறது. இருந்தாலும் மகிழ்ச்சி என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios