நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'குபேரா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. சாதாரணமான காதல் கதையை, அவருடைய ஸ்டைலில் இயக்கி இருந்தார். இந்த படம் போதுமான வரவேற்பை பெற தவறிய நிலையில், வசூல் ரீதியாக தோல்வியை தழுவினார்.
இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் குபேரா. இதை தொடர்ந்து, இட்லி கடை, தேரே இஸ்க் மெய்ன் ஆகிய படங்களும் இவருடைய லிஸ்டில் அடுத்தடுத்து உள்ளது. இதில் 'இட்லி கடை' படத்தை மட்டும் தனுஷ் இயக்கி நடித்துளளார்.

இந்த நிலையில் தான் 'குபேரா' படத்தின் ரிலீஸ் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தஹில், சுனைனா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 'குபேரா'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான இந்தப் படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
என்னதான் மாஸ் ஹீரோவானாலும் தனுஷ் இந்த ரோல் மட்டும் இன்னும் பண்ணல; ரசிகர்கள் வருத்தம்!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில், தனுஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். இதன் காரணமாக இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது மும்பை தாராவியை மையப்படுத்திய படம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே குபேரா படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது படம் எப்போது திரைக்கு வரும் என தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஜூன் 20ஆம் தேதி, இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. அதிகாரம், பணத்திற்கான போராட்டம், விதியின் விளையாட்டு இப்படி எல்லாவிதமான அம்சங்கள் நிறைந்த படமாக குபேரா இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
