seetha parthiban again join keerthana marriage

நடிகை சீதா, ரஜினி, கமல், என 80களில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கதாநாயகனாக அறிமுகமான 'புதியபாதை' திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இவர்களுக்கும் காதல் துளிர் விட்டது. இந்த காதல் திருமணத்திலும் முடிந்தது.

திருமணம்:

சீதாவின் பெற்றோர் தரப்பில் இருந்து வந்த பிரச்சனைகளை சமாளித்து காதலித்த சீதாவை கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார் பார்த்திபன். பின் இருவருக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2001 ஆண்டு விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.

சின்னத்திரையில் கவனம்:

வெள்ளித்திரையில் அம்மா கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் வந்ததால், சீதா சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை 2010 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமண வாழ்கையும் நிலைக்கவில்லை 2016 ஆண்டு சதீஷிடம் இருந்தும் விவாகரத்துப் பெற்றார்.

மகள் திருமணம்:

தற்போது சீதா மற்றும் பார்த்திபனின் இரண்டாவது மகள் கீர்த்தனாவின் திருமணம் நடைபெற உள்ளது. பல வருடங்களாக சீதாவுடன் பேசாமல் இருந்த பார்த்திபன் மகள் திருமணத்திற்காக பேசினார் அண்மையில் நடந்த மகளின் நிச்சயதார்த்த விழாவிலும் சீதா கலந்துக்கொண்டார்.

பார்த்திபனுக்கு கோரிக்கை:

எந்த ஆண் துணையும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வரும் சீதா மகளின் திருமணத்தை காரணமாக வைத்து மீண்டும் கணவர் பார்த்திபனோடு இணைய ஆசைப்படுவதாகவும் இது குறித்து பார்த்திபனிடம் சீதா கோரிக்கை வைத்துள்ளதாகவும் தற்போது பல தகவல்கள் வெளியாகி வருகிறது.