Asianet News TamilAsianet News Tamil

தமன்னாவிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்.. மூன்று விருதுகளை அள்ளிச்சென்ற கண்ணே கலைமானே!

சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே திரைப்படம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து மூன்று விருதுகளை ஒரு பன்னாட்டு திரைப்பட விழாவில் பெற்றுள்ளது மாபெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

Seenu ramasamy kanne kalaimaane movie scored three awards in Indo French International Film Festival Awards 2023
Author
First Published Jul 9, 2023, 6:52 PM IST

பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "கண்ணே கலைமானே". இந்த திரைப்படத்தில் கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். 

விவசாயம் படித்து முடித்த ஒரு இயற்கை விவசாயியாக அந்த திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நாயகியாக தமன்னாவும் முக்கிய வேடங்களில் மூத்த நடிகை வடிவுக்கரசி, பூ ராம், அம்பானி சங்கர், சரவணன் சக்தி, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான நாளிலிருந்து பல விருதுகளை இந்த திரைப்படம் தொடர்ச்சியாக குவித்து வருகிறது. 

வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் 233.. ஒரு பயோ பிக் கதையா?.. யாருடையது? - லீக் ஆனா சூப்பர் அப்டேட்!

இந்நிலையில் இந்த படத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. Indo French International Film Festival 2023ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகைக்கான விருது தமன்னாவிற்கும், சிறந்த நடிகை (Supporting Role) விருது வடிவக்கரசிக்கும் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே திரைப்படம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து மூன்று விருதுகளை ஒரு பன்னாட்டு திரைப்பட விழாவில் பெற்றுள்ளது மாபெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. திரை துறையினர் பலரும் தமன்னாவிற்கும், வடிவுக்கரசிக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் இயக்குனர் சீனு ராமசாமிக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

"எங்க தாத்தா ஏன்டா தமன்னா கூட ஆடப்போறாரு".. வைரலான மீம் - ரஜினியை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!

Follow Us:
Download App:
  • android
  • ios