பாரபட்சமின்றி அனைவரது வாழ்க்கையிலும் விளையாட்டு காட்டும் கொரோனா, திரைப்பிரபலங்களையும் சும்மா விடவில்லை. ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரத்திலும் எக்கச்சக்கமான நடிகர், நடிகைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் திரைத்துறையினரும், ரசிகர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். 

குறிப்பாக தற்போது பிரபல பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐசியூ- வில் சிகிச்சை பெற்று வருவதும் திரையுலகினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் நடந்த கூட்டு பிரார்த்தனைகு பிறகு அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில்  தமிழ் சினிமா இயக்குநருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இல்லாமல் அரசியல் மூலமாகவும் மக்களுக்கு நன்றாக பரிட்சயமானவர் இயக்குநர் வ.கெளதமன். னவே கலையாதே, மகிழ்ச்சி உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். மேலும் சந்தனக்காடு, ஆட்டோ சங்கர் என இவர் இயக்கிய தொடர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் வ.கெளதமனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் வேதனை அடைந்துள்ள சீமான், வ.கெளதமன் விரைவில் நலம் பெற வேண்டுமென தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், தம்பி வ.கௌதமன் அவர்களும் அவரின் குடும்பத்தாரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விரைவில் மீண்டு நலம் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.