seeman speak about rajinikanth plays casino in america
தமிழகத்தில் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கூலாக அமெரிக்காவில் காஸினோ விளையாடி வருவது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
உடல் பரிசோதனைக்காகவும், 2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகளை பார்வையிடுவதற்காகவும், நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
அவருடன், அவரது மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் உடன் சென்றுள்ளார். உடல் பரிசோதனை நேரம் போக மீதி நேரம் அவர் தனது நண்பர்களுடன் பேசியும், அரசியல் தொடர்பான ஆலோசனைகளிலும் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ஒரு கிளப்பில் கேசினோ விளையாடி கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் மக்கள் பிரச்சனை, திரையுலகப் பிரச்சனை, ஜிஎஸ்டி பிரச்சனை என நாங்கள் மக்களுக்காக இங்கே போராடிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் ரஜினியோ அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கின்றார் என கிண்டல் செய்தார்.
காஸினோ ஒரு முதலாளிகளின் விளையாட்டு, எனவே அதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது' என்றும் சீமான் தெரிவித்தார்.
