25 வயதே ஆகும், மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலர் எனப்படும் சுப்பம் தாட்கே ஆகியோர், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதே ஆகும், மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலர் எனப்படும் சுப்பம் தாட்கே ஆகியோர், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 20, ஆம் தேதி) அன்று காலை, கோவாவின் ஹட்ஃபேட் கிராமத்திற்கு அருகே அதிகாலை 5 மணியளவில் இவர்கள் இருவரும் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஈஸ்வரி தேஷ்பாண்டேவின் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் ஒரு ஓடையில் மோதி அருகே இருந்த சிற்றோடையில் விழுந்ததால், இந்த கோர விபத்து நடந்துள்ளது.
மேலும் செய்திகள்: பிரபல நடிகை மியா ஜார்ஜ் வீட்டில் நடந்த மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

ஈஸ்வரி மற்றும் அவரது காதலர் சுப்பம் இருவரும், இந்த விபத்தில் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து அறிந்த கோவா போலீசார் கடந்த திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தீயணைப்பு படையின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது மட்டும் இன்றி, அவர்களது குடும்பத்தினரும் தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்: கையில் மது பாட்டிலுடன் செம்ம பார்ட்டி பண்ணும் அமலா பால்..! வைரலாகும் போட்டோஸ்..!

மேலும் ஈஸ்வரி தேஷ்பாண்டேய பலரும் சுப்பம் இருவரும், இந்த ஆண்டு அக்டோபரில் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்குள் இப்படி ஒரு விபத்து இவரால் இருவரின் உயிரையும் பறித்துள்ளது. 25 வயதான ஈஸ்வரி தேஷ்பாண்டே, புனேவின் கிர்கட்வாடியில் வசித்து வந்தார். மறுபுறம், சுப்பம் தாட்கே, நான்டெட் நகரில் வசிக்கிறார். இந்த ஜோடி செப்டம்பர் 15, புதன்கிழமை புனேவுக்குச் சென்றனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: நாக சைதன்யாவிற்கு சமந்தா இரண்டாவது மனைவியா? இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!!

ஈஸ்வரி தேஷ்பாண்டே மராத்தி சினிமாவில் அறிமுகமாக இருந்தார். இவர் நடித்து முடித்த சில படங்கள் விரைவில் வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த கோர விபத்தில் பலியான இவருக்கு, ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 25 வயதே ஆகும் நடிகை உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
