நடிகை சாயிஷா, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து. மள மளவென விஜய் சேதுபதி, கார்த்தி, ஆர்யா ஆகிய நடிகர்கள் நடித்த படங்களில் கமிட் ஆனார்.

ரசிகர்களும், இவருடைய டான்ஸ் மற்றும் அழகால் ஈர்க்கப்பட்டனர். இவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கு,  இவர் பெரிய நடிகையாக வருவார் என பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்த நிலையில், 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது, ஆர்யாவுடன் காதலில் சிக்கினார்.

இவர்களுக்குள் இருந்த ரகசிய காதல், இரு தரப்பு நண்பர்கள் மூலமாக வெளியே வந்தது. ஆரம்பத்தில் பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தற்போது இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து திருமணமும் நடத்தி வைக்க ஓகே சொல்லி விட்டனர்.

அதன்படி இவர்களுடைய திருமணம், மார்ச் 10 தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், மற்றும் ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுத்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் ரசிகர்கள் பலர் சாயிஷாவிடம், திருமணத்தை தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா? என்கிற கேள்வியை எழுப்பி வந்தனர். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக தற்போது கன்னட படத்தில் கமிட் ஆகியுள்ளார் சாயிஷா. 'யுவரத்னா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ள சாயிஷா... 'யுவரத்னா' படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என்றும், கன்னடத்தில் அறிமுகமே புனித் ராஜ்குமார் படத்தில் என்று நினைக்கையில் பெருமையக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் திருமணத்திற்கு பின் நடிப்பேனா என கேட்கிறார்கள், கண்டிப்பாக நடிப்பேன். இந்த படத்தின் படப்பிடிப்பு தன்னுடைய திருமணத்திற்கு பின்பு தான் நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.

ஏற்கனவே சமந்தா, அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் தொடந்து கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் சாயிஷாவும் இந்த லிஸ்ட்டில் இணைத்துள்ளார்.