savi movie release in january 5th

எதார்த்த சினிமா வரிசையில் தமிழில் விரைவில் வெளியாக உள்ளது "சாவி" திரைப்படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளைத் திறப்பதாக இந்த படம் அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

ராசுமதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அறம் படத்தில் தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த சுனுலெட்சுமி துருதுருவென விழிகளுடன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே சாவி படத்தின் கதை. சாவி உங்களின் இதயங்களையும் திறக்கக்கூடும். என மிகவும் நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் இரா.சுப்பிரமணியன். இந்த படம் வரும் ஜனவரி 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.