நடிகையிடம் சில்மிஷம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாட்டர்டே நைட் படத்தின் தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் நடிப்பில் தற்போது சாட்டர்டே நைட் என்கிற மலையாள படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 7-ந் தேதி ரிலீசாக உள்ளதால், தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாட்டர்டே நைட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோழிக்கோடில் உள்ள பிரபல மால் ஒன்றில் நடைபெற்றது. அதில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது அவர்களைக் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

இதையும் படியுங்கள்.... நானே வருவேன் ரிலீஸ்... பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் அதகளப்படுத்திய தனுஷ் ரசிகர்கள் - வைரல் வீடியோ

Scroll to load tweet…

அங்கிருந்து வெளியே செல்லும் போது ரசிகர்கள் கூட்டம் அவர்களை சூழ்ந்தது. இதனால் நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கூட்ட நெரிசலில் சிக்கினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் நடிகைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடுப்பான நடிகை சானியா ஐயப்பன், அந்த நபரை கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டுள்ளார்.

அவர் அறைந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்.... தனுஷ் ரசிகர்களின் எல்லைமீறிய கொண்டாட்டத்தால் மக்கள் அவதி... அரசு பேருந்தை மறித்து அட்ராசிட்டி செய்த வீடியோ இதோ