Sathyaraj plays the role of MGRs biopic ...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆராக நடிகர் சத்யராஜ் நடிக்க வைக்க இருப்பதாக இயக்குநர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காமராஜர் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கிய இயக்குநர் பாலகிருஷ்ணன் தற்போது எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கவுள்ளார்.

இதில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜிடம் கேட்கப்பட உள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்தார்.

தமிழக அரசியல் மற்றும் சினிமாவில் பெரும் புள்ளியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். இவரது கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

நடிகர் சத்யராஜ் அவர் மாதிரி பல தடவை படத்தில் நடித்திருக்கிறார். அதனால் அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம் பாலகிருஷ்ணன்.

“சத்யராஜ் இந்தப் படத்தில் நடிக்க கண்டிப்பாக சம்மதிப்பார்” என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் வலுவாக நம்புகிறார் பாலகிருஷ்ணன்.