கொரோனா பாதிப்பிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என பிரபல நடிகர் சத்தியராஜினின்  மகளும் பிரபல ஊட்ட சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நோயிலிருந்து விடுபடலாம்.

மேலும் கொரோனா வைரஸ்,  முதியவர்களையும் சிரியவர்களையும் தான் அதிகம் தாக்குகிறது என்றும், உயிர்க்கொல்லி நோயாக உருவெடுக்கும், கொரோனாவிற்கு இதுவரை சரியான மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், தற்சமயம் அதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூட்டமாக இருப்பதை தவிர்ப்பது அவசியம்.

எங்கு வெளியில் சென்றாலும், முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.  உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ள, நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நல்லது. இதன் மூலம் கொரோனா வராமல் பாதுகாத்து கொள்ளமுடியும் என எளிய வழியை கூறியுள்ளார் திவ்யா.