உதயநிதிக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவித்த மாரி செல்வராஜ் - சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள்!
உதயநிதி சனாதனதிற்கு எதிராக பேசியது, பாஜக கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்பத்திய நிலையில், அவருக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வரும் நிலையில், பிரபலங்கள் அடுத்தடுத்து உதயநிதிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது பேசிய அவர், "சனாதன எதிர்ப்பு மாநாடு" எனக் குறிப்பிடாமல், ‘சனாதன ஒழிப்பு மாநாடு" எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும் என பேசி இருந்தார். இவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து, எதிர்ப்புகள் கிளம்பின.
குறிப்பாக அரசு பதவியில் இருப்பவர்கள் மற்றவர்கள் உணர்வுகளை புண் படுத்த கூடாது என்கிற அடிப்படை கூட தெரியாமல் உதயநிதி பேசியுள்ளார் என்பவே, அவர் மீது புகார்கள் அளிக்க உள்ளதாகவும், தன்னுடைய பேச்சுக்கு உதயநிதி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜகவை சேர்ந்த பலர் போர் கொடி உயர்த்தியுள்ளனர்.
அதே சமயம், உதயநிதிக்கு பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சத்யராஜ், தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் "சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன். ஒவ்வொரு விஷயத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையாளும் விதம் பெருமையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’மாமன்னன்’ படத்தின் கடைசி காட்சியை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் உதயநிதி ’என்ன பாக்குற, இனிமே உன் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் யாரும் பயப்பட போவதில்லை, இதுக்கு அப்புறமும் துப்பாக்கி தூக்கி மிரட்டின கூட, அவன் அவன் அவனோட திசையை பார்த்து ஓடிகிட்டு தான் இருப்பான், புரியுதா என்று கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.