ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. உடனடியாக அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் சென்னை திரும்பினர். இருப்பினும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்நிலையில் கடந்த 25ம் தேதி திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட மருத்துவமனை, எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. 

 

இதையும் படிங்க: விக்கி - நயன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... கவர்ச்சி உடையில் அசத்தலாக போஸ் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார்....!

இதனிடையே ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா அளித்துள்ள பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை அல்லது நாளை காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் விரைவில் வீடு திரும்ப உள்ள செய்தி அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.