கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தை உலுக்கியது. 

இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்டுகளாக இது போன்ற பல குற்றச்சமபவங்களை அரங்கேற்றி வந்தது தெரியவந்தது. இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை தொடர்ந்து,  இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக தண்டனை பெற்று தர வேண்டும் என கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  மேலும் கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.

"