Asianet News TamilAsianet News Tamil

“கொடுஞ்செயல் சாத்தான்கள் களையெடுக்கப்பட வேண்டும்”.... சாத்தான்குளம் சம்பவத்தால் கொந்தளித்த பிரசன்னா....!

இந்த சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில் நடிகர் பிரசன்னா தனது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

Sathankulam Father and Son Death Case: Actor Prasanna Seek Justice for Jeyaraj and Fenix
Author
Chennai, First Published Jun 27, 2020, 12:12 PM IST

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் கடைகள் என எதுவும் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை. இந்த நிலையில் கடந்த 19ந் தேதி சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதா? என்பதை காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உறுதி செய்ய வந்துள்ளார். அப்போது ஜெயராஜ் என்பவர் தனது செல்போன் கடையை மூடாமல் திறந்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. அப்போது கடையை உடனடியாக மூடுமாறு பாலகிருஷ்ணன், ஜெயராஜை கூறியுள்ளார்.

Sathankulam Father and Son Death Case: Actor Prasanna Seek Justice for Jeyaraj and Fenix

 

இதையும் படிங்க: பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

அப்போது ஜெயராஜுக்கும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் போலீசையே எதிர்த்து பேசுறீயா? எனக்கூறி, ஜெயராஜை சட்டையைப் பிடித்து இழுத்து காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்த பென்னீஸ் ஏன் எங்க அப்பாவை இப்படி இழுத்து போறீங்க? என கேட்க அவரையும் காவல்நிலையம் வா எனக்கூறிவிட்டு சென்றுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த பென்னீஸ் தனது அப்பாவின் நிலையை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அவரையும் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

Sathankulam Father and Son Death Case: Actor Prasanna Seek Justice for Jeyaraj and Fenix

 

இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், கோவில்பட்டி கிளை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பென்னீஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். மறுநாள் அவரது தந்தை ஜெயராஜ் மரணமடைந்தார். காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணைக்கோரியும், சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sathankulam Father and Son Death Case: Actor Prasanna Seek Justice for Jeyaraj and Fenix

 

இதையும் படிங்க: ஆசன வாயில் லத்தியை சொருகி... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த திரைப்பிரபலங்கள்...!

இந்த சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில் நடிகர் பிரசன்னா தனது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  “சாத்தான்குளம் இரட்டை கொலை ஏதோ இரு Lockup death என்று கடந்து செல்ல இயலாது. அதன் விவரங்கள், படிக்கையில் வார்த்தைகளற்று போகும்படியான மிக குரூரமான விதத்தில் Jeyaraj மற்றும் Fenix தாக்கப்பட்டிருப்பது மனிதத்தன்மையற்ற காரியம். ஆழ்ந்த மனநோய் உள்ளவர்களால் மட்டுமே இப்படியான கொடுமையை செய்ய முடியும். கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் தன்னலமின்றி சேவை செய்து இன்னுயிரையும் தந்த தேவதை காவலர்க்கிடையில் இப்படியான கொடுஞ்செயல் சாத்தான்கள் களையெடுக்கப்பட வேண்டும்” 

“நீதியும், கொல்லப்பட்ட உயிர்களுக்கான நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்யாது நிலையில் நின்று காவல் பணி செய்திட மற்ற காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். பல பேரழுத்தங்களில் உள்ள காவலர்களுக்கு எல்லை மீறாதிருக்க உளவியல் ஆலோசனைகள் வழங்கிட வேண்டும். காவல்துறை உங்கள் நண்பன் எனும் வாக்கியத்தில் ஏதேனும் உண்மை இருப்பின் அதை நிரூபித்து நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios