கடந்த எட்டு ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ‘பேட்ட’ சசிக்குமார் ‘ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்’ என சவுண்டு விடத் தயாராகிவிட்டார். இத்துடன் இப்படம் குறித்த பெரிய இடத்து சஸ்பென்ஸ் ஒன்றும் லீக்காகியுள்ளது.

‘சுப்ரமணியபுரம்’ படத்தில் இயக்குநர் கம் நடிகராக அறிமுகமாகி ‘ஈசன்’ வரை இயக்கிவந்த சசிக்குமார் அப்படத்தோடு டைரக்‌ஷனை மூட்டைகட்டி வைத்துவிட்டு முழு நேர நடிகராக மாறினார். நடுவே சில படங்களைத் தயாரித்து நஷ்டப்பட்டதால் பெரும் சிக்கலில் மாட்டியிருந்தார். அந்த சமயத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் ‘பேட்ட’ படம் அவருக்கு பொருளாதார ரீதியாகக் கைகொடுத்தது.

இந்நிலையில் மீண்டும் படம் இயக்கும் முடிவில் ஒரு பிரம்மாண்ட சரித்திரக் கதையை எடுத்துக்கொண்டு சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜயிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை பிடிக்கவில்லை என்று சொல்லி விஜய் நிராகரித்தார்.

சசிக்குமார் விஜயிடம் கதை சொல்லி அது நிராகரிக்கப்பட்டதை அறிந்த நடிகர் சூர்யா தனது உதவியாளர் ஒருவர் மூலம் சசிக்குமாரை வரவழைத்து அதே கதையை கேட்டு உடனே ஓ.கே.செய்துவிட்டார்.  செல்வராகவனுடன் சூர்யா நடித்துவரும் ‘என்.ஜி.கே’ படம் முடிந்தவுடன் சசிக்குமார் - சூர்யா காம்பினேஷன் ஸ்டார்ட் ஆகும் என்று தெரிகிறது.