sasikumar jont the dhanush movie
என்னை நோக்கி பாயும் தோட்டா
கௌதம் மேனன் இயக்கத்தில் 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா.இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.
புத்துயிர்
2016 ம் ஆண்டு தொடங்கிய இப்படம் நடுவில் படப்பிடிப்பு பல காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு வழியாக புத்துயிர் பெற்றது.
மாரி 2
தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்திலிருந்து மறு வார்த்தை பேசாதே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சில நாட்கள் இப்படத்தில் நடித்த நடிகர் தனுஷ் படப்பிடிப்பு பிரச்சனையால் பாலாஜி மோகன் இயக்கும் மாரி 2 படத்தில் நடிக்க சென்று விட்டார்.தற்போது மீண்டும் இப்படத்தில் நடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார்
இந்நிலையில் தனுஷுடன் இணைந்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் சசிக்குமார் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறாராம். ஏற்கனவே பாகுபலி புகழ் ராணா டகுபதி இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
