சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று அவர் கைது செய்யப்படுகிறார் என்கிற தகவல் வெளியானதுமே, பல நடிகர் நடிகைகள் அவருக்கு எதிராக வாய்மையே வெல்லும், தற்போது உண்மைக்கு நீதி கிடைத்துள்ளது.... கொண்டாட வேண்டிய தருணம் இது என தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன் தீர்ப்பு வெளிவந்ததுமே பாடல் வரிகள் மூலம் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.... ஏற்கனவே கமல்ஹாசன் தொடர்ந்து முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தும், சசிகலாவை எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

இதே போல் நடிகை ஸ்ரீப்ரியா இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்த நீதிபதிக்கு தன்னுடைய நன்றிகளை என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே .பாக்கியராஜ் மகன் நடிகர் சாந்தனு... உண்மை வென்றுள்ளது.... வாய்மையே வெல்லும் என்றும் உண்மைக்கு கிடைத்த நீதி இது என ட்விட் செய்துள்ளார்.

கருணாநிதியின் பேரன் நடிகர் அருள்நிதி... 3பேர் உள்ளே.... 125 பேர் வெளியே என்றும் பத்தரையுடன் முடிந்தது ஏழரை என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சீனு ராமசாமி 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என பதிவிட்டுள்ளர்.

 இயக்குனர் சந்தோஷ் சிவன்... வன்முறை என்றும் நீண்ட தூரம் பயணம் செய்யாது என கூறியுள்ளார்.

இயக்குனர் பார்த்திபன்... சட்டம் என் கையில் உள்ளது பணம் என்னிடம் உள்ளது என மார்தட்டி கொள்வது உண்மையையும் நீதியையும் மறைத்து விடாது. அதே போல் எதற்கும் ஆசை படாமல் நீதி கூறிய ஆச்சரியருக்கு நன்றி தெரிவித்துள்ளார் .

இயக்குனர் அஹமத் 'கர்மா தனது வேலையை காட்டுகிறது 'என கூறியுள்ளார்.

இதே போல தொடர்ந்து பல பிரபலங்கள் சசிகலாவிற்கு எதிராக தங்களுடைய கருத்தை கூறி... கழுவி ஊற்றி வருகின்றனர்.... மக்களுக்கு உண்மையாகவே பத்தரையோடு முடிந்ததா ஏழரை நீங்கள் தான் கூற வேண்டும்.