'சார்பட்டா' திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்த அனைவருமே நன்கு பேசப்பட்ட நிலையில், விஜய் டிவி பிரபலம் டைகர் தங்கதுரை நடிப்பு எதிர்பார்த்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாமல் போனது சிறு ஏமாற்றம் என்று கூட சொல்லலாம். 

'சார்பட்டா' திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்த அனைவருமே நன்கு பேசப்பட்ட நிலையில், விஜய் டிவி பிரபலம் டைகர் தங்கதுரை நடிப்பு எதிர்பார்த்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாமல் போனது சிறு ஏமாற்றம் என்று கூட சொல்லலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை நாளுக்கு நாள் பிரபலங்கள் மற்றும், அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பெரிய கேரக்டர், சிறிய கேரக்டர் என இல்லாமல் அனைவருமே இந்த படத்திற்காக போட்ட உழைப்பையும் படத்தை பார்க்கும் போது முடிந்தது. குறிப்பாக, ஆர்யா, ஜான் கோகென், ஜான் விஜய், ஷபீர் , துஷாரா, போன்ற முக்கிய கதாபாத்திரங்களை பாராட்டாத நெட்டிசன்கள் இல்லை. இந்நிலையில் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பிரபலங்களில் ஒருவர் தான் விஜய் டிவியில் காமெடியில் கலக்கி வரும் டைகர் தங்கதுரை.

'சார்பட்டா' படத்தில் பாக்ஸிங் கமேண்டர் ரோலில் காட்டு காத்து கத்தி நடித்திருப்பார். இப்படம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என நம்பிய இவருக்கு, இவர் எதிர்பார்த்த அளவுக்கு இவரது கதாபாத்திரம் பேசப்படாதது சற்று வருத்தம் என்றே சொல்லலாம். அதே நேரத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து அசதியிந்தார் தங்கதுரை.