அக்கா விஜய் சார் கூட எப்ப ஜோடியா நடிக்கப்போறீங்க? என்ற ரசிகர்களின் கேள்விக்கு ‘அட போங்கப்பா அவரோட ‘சர்கார்’ படம் பாக்குறதுக்கு டிக்கெட்டே கிடைக்கலைன்னு பயங்கர அப்செட்ல இருக்கேன்’ என்று பதிலளித்திருக்கிறார் ‘வடசென்னை’வாசியான நடிகை ஐஸ்வர்யா. 

சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு பொழுது போகாத சமயங்களில் ட்விட்டரில் ‘ஆஸ்க் மி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்களுடன் கடலைபோட ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த டைம் பாஸ் ஆட்டத்தில் நேற்று இறங்கிய நடிகை ஐஸ்வர்யா ‘ஆஸ்க் யுவர் ஐஸு’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்களுடன் உரையாடல் நிகழ்த்தினார். 

இதில் ஏகப்பட்ட லவ் புரபோஷல்கள், ஷங்கர் படத்துல நடிப்பீங்களா? பாலா இன்னுமா உங்களை கூப்பிடலைகளுக்கு மத்தியில் ‘சர்கார்’ குறித்த கேள்விகளே அதிகம் இடம்பிடித்தன. அவற்றுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த ஐஸு,’ அடுத்து விஜய் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கேன். ஆனா பாருங்க எனக்கு இப்பவரைக்கும்’சர்கார்’ படம் பாக்குறதுக்கு டிக்கட் கூட கிடைக்கலை’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.