ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் சர்கார் திரைப்படம் , விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் விஜய் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 

வரலஷ்மி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சர்கார் படத்தில் தளபதி ரசிகர்களுக்கு நிறைய ஸ்வீட் சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற சர்கார் இசைவெளியீட்டு விழாவின் போது விஜய் பேசியதும் கூட அப்படி ஒரு சர்ப்ரைஸ்களில் ஒன்று தான். என்ன தான். அரசியல்வாதிகளை அசரவைத்து தளபதி ஒருபக்கம் சர்ச்சையில் சிக்கினாலும், அவரின் இந்த பேச்சு ரசிகரகளுக்கு சந்தோஷத்தையே தந்திருக்கிறது. 

அரசியலையும், அரசாங்கத்தையும் மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த சூப்பர் ஹீரோ கதையில், விஜய்-ன் கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப தான் படத்தின் டைட்டில் வைக்க வேண்டும் என்பது முருகதாஸின் விருப்பமாக இருந்திருக்கிறது. என்ன தான் சர்கார் எனும் டைட்டிலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், இன்னும் பெட்டரான டைட்டில் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றின் போது முருகதாஸும் கூட சர்கார் டைட்டில் பற்றிய தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்துக்கு வில்லாதி வில்லன் எனும் பெயரை வைக்கலாம் என்று தான் முருகதாஸ் நினைத்திருந்தாராம். ஆனால் கதைக்கு சர்கார் எனும் பெயர் தான் விறுவிறுப்பை கூட்டும் என்பதால் இந்த பெயரினை முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார் முருகதாஸ். 

ஆனால் கோடம்பாக்கம் பக்கத்தில் வேறுவிதமான கருத்து ஒன்று உலவுகிறது. வில்லன் என்ற பெயரில் அஜீத் படம் ஒன்று ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது. அதனால் தான் இந்த டைட்டிலை இவர்கள் தவிர்த்திருக்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.