sarkar films another picture leaked
தளபதி விஜயின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலக்கலாக வெளிவர இருக்கும் திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி இருந்தது. இரகசியமாக காக்கப்பட்டு வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பு, இதுவரை ”தளபதி 62” என்றே அறியப்பட்டு வந்தது.

நேற்று தான் இந்த திரைப்படத்தின் உண்மையான தலைப்பு அறிவிக்கப்பட்டது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ”சர்கார்” எனும் இந்த டைட்டில் அவ்வளவாக திருப்தி படுத்தவில்லை. என்றாலும் படம் அவர்களை திருப்திபடுத்தும், என்பது அனைவரின் நம்பிக்கையுமாக இப்போது இருக்கிறது.
அதனை நிரூபிக்கும் வகையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த புகைப்படத்தில் இரண்டு அரசியல் தலைவர்களுக்கு நடுவில், விஜய் கெத்தாக அமர்ந்திருக்கிறார்.

ஏற்கனவே இருபெரும் அரசியல்வாதிகளின் இணைப்பு விழா எனும் காட்சியும், இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அது தொடர்பான படங்களில் கரு.பழனியப்பன், மற்றும் ராதா ரவி தான் அந்த அரசியல்வாதிகள் வேடத்தில் நடித்திருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் விஜயின் இந்த புகைப்படத்திலும், கரு.பழனியப்பன் இருக்கிறார்.

இதில் அந்த மேடையில் இருக்கும் அரசியல்வாதிகளை அலட்சியம் செய்தபடி அமர்ந்திருக்கும் விஜயின் தோற்றத்தை பார்த்து, அவர் இந்த படத்தில் ஒரு தொழிலதிபராக தான் நடித்திருக்கிறார், என உறுதியாக கூறி வருகின்றனர் கோலிவுட் வட்டாரத்தை சேர்ந்தோர்.
