நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வரும் 6 ஆம் தேதி தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், இது வரை இல்லாத அளவாக கேரள மாநிலத்தில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் 175 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்தியுள்ளனர். சர்கார் படம் திரையிடும் முன்பே பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், கேரளாவில் வைக்கப்பட்டுள்ள  கட்-அவுட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ரீலீஸ் ஆவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்தது. பட ஆடியோ வெளியீட்டின்போது விஜய் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர் சர்கார் படத்தின கதை என்னுடையது என வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குநர் நீதிமன்றம் சென்றார். பின்னர் அது சமரசம் ஆனது. இந்தப்படம் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது

இந்நிலையில் உலகம்முழுக்கதமிழ்சினிமாரசிகர்கள்ஆர்வத்துடன்சர்கார்படத்தைகாணகாத்திருக்கிறார்கள். தீபாவளிஅன்று 80 நாடுகளில்ரிலீஸ்ஆகவுள்ளதுதமிழ்நாட்டில்சொல்லவேவேண்டாம்விஜய்ரசிகர்கள்செமகொண்டாட்டத்தில்இருக்கிறார்கள் .

இதனிடையே விஜயின் கேரள ரசிகர்கள் சத்தமில்லாமல் தமிழக ரசிகர்களை விஞ்சிவிட்டனர். சர்கார் படம் ரிலீஸ் ஆவதையொட்டி திருவனந்தபுரத்தில் விஜய்க்கு 164 உயரத்தில் பிரமாண்டமான கட்-அவுட் ஒன்றை வைத்து அசத்தியுள்ளனர். இது கேரள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.