Sardar Movie : சர்தார் பட ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகளை படக்குழு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சர்தார். இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் கர்ணன் பட நடிகை ரெஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒன்று போலீஸ் அதிகாரி கதாபாத்திரம்.

சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஷூட்டிங்கும் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகளை படக்குழு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…

இந்நிலையில், சர்தார் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Nayanthara : திருப்பதியில் செஞ்ச அதே வேலையை கேரளாவிலும் செய்த நயன்தாரா... தீயாய் பரவும் போட்டோஸ்