இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் மிகவும் கோபமாக மற்ற போட்டியாளர்களிடம், "இப்படியே செய்தால் அசிங்கப்பட்டு போவிங்க" என தெரிவித்து உள்ளார்

பருத்தி வீரன் படத்தில் நடித்த சரவணனை, நடிகர் கார்த்திக் சித்தப்பு என அழைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர். அதன் பின் மற்ற பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சரவணன். 

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள சரவணன் தொடக்கத்தில் அனைவரிடமும் அன்பாக பேசி அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் "நான்  வேலை செய்யவில்லை என்று தெரியுமா? இப்படியே சென்றால் அசிங்கப்பட்டு போவீங்க.." என கோபமாக பேசுகிறார். இந்த காட்சி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

எனவே இன்று வெளியாக உள்ள நிகழ்ச்சிகள் என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவல் இப்போதே கிளம்பி உள்ளது. மேலும் வனிதாவுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் நிறைவேற்றவே சரவணனுக்கு இதுபோன்று ஏதாவது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆக மொத்தத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.