Saravana Stores Saravanan Arul who now wants to act with Nayanthara is starring with Oviya ...

சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் எஸ்.எஸ்.சரவணன் அருளுடன் நடிகை ஓவியா நடிக்க இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருகியுள்ளது. இதனால், தங்களது படங்களில் நடிக்க வைக்க நிறைய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் அவர் எந்தப் படத்தையும் இதுவரை ஒப்புக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை.

சரவணா ஸ்டோர் அதிபர் எஸ்.எஸ் சரவணன் அருள், விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவர் ஹன்சிகா மோத்வானி, தமன்னாவுடன் நடித்த விளம்பரம் மிகவும் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்பட்டார். தற்போது சரவணா ஸ்டோரின் அடுத்த விளம்பரத்தில் அதன் உரிமையாளர் சரவணனுடன் ஓவியா நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

ரசிகர்கள் அனைவரும் இதுவரை பார்த்திராத ஓவியாவை அந்த விளம்பர படத்தில் பார்க்கலாம்.