Saravana Stores President Saravanan and Minister Seloor Raju are my heroes - kasturi

சரவணா ஜவுளிக்கடை அதிபர் சரவணன் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தான் என்னுடைய ஹீரோக்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சமூக வலைதளங்களில் உலா வருபவர் நடிகை கஸ்தூரி.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுக் குறித்தும் போர் அடிக்குது என்று விமர்சித்து பின்னர் ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து அடாவடி காட்டியவர்.

இந்த நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் எனக்கு பிடித்த ஹீரோக்கள் யார் என்று கேட்கிறார்கள் என்றும் அதற்கு இப்போது பதிலளிக்கிறேன் என்றும் கூறிய கஸ்தூரி “சரவணா ஜவுளிக்கடை அதிபர் சரவணன் மற்றும் செல்லூர் ராஜூ தான் என்னுடைய ஹீரோக்கள்” என்று கூறியுள்ளார்.

அதோடு நிறுத்தாமல் அவர்களின் போட்டோவைப் போட்டு #luvv #hero என்று ஹேஷ்டாக் போட்டுள்ளார்.

Scroll to load tweet…

இவர் கலாய்க்குறாரா? சீரியஸா சொல்றாரா? என்று தெரியாமல் இவரது டிவிட்டர் ஃப்லோவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

நமக்கு குழப்பமே வேண்டாம் இவர் சீரியசா கலாக்குறாரு…