saravana stores arul acting in movies
நடிகை ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் விளம்பரத்தில் தோன்றி, சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த பெருந் தொழிலதிபர், சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகி அருள்.
இவர் நடித்த விளம்பரத்திற்கும் பல்வேறு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் இவர் சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் கலந்துகொண்டனர். அப்போது நன்கொடையாக 2.5 கோடியை நடிகர் சங்க கட்டடம் கட்ட அள்ளிக்கொடுத்தார்.

இவரிடம் நடிகர் ஸ்ரீமன், நீங்கள் படங்களில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்ப... அதற்கு பதில் அளித்த அருள், கண்டிப்பாக பாசிட்டிவான கதைக்களம் அமைந்தால் திரைப்படத்தில் நடிக்க தயார் என கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
மேலும் எத்தனை ஹீரோயின்கள் உங்கள் படத்தில் நடிப்பார்கள் என கேட்டதற்கு, அதுவும் கதையை பொறுத்து தான் அமையும் என கூறினர்.
ஏற்கனவே இவர் நடித்து வெளிவந்த விளம்பரத்திற்கே பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் அதையெல்லாம் சற்றும் யோசிக்காமல் கதாநாயகனாகவும் நடிப்பேன் என்று உறுதியாக கூறும் அருளின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும்!
