சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படம்... டைட்டிலே இப்படியா..? செம மெர்சலா இருக்கே..!
விளம்பரத்திற்கு விளம்பரமும் ஆனது. படத்துக்கு படமும் ஆனது. நீங்க கலக்குங்க அண்ணாச்சி..!
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்து தயாரிக்கும் படம் பூஜையுடன் தொடங்கி விட்டது. படத்திற்கு இன்னமும் பெயர் வைக்காததால் தற்போது புரொடக்ஷன் நம்பர் -1 என்று மட்டும் பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஒருகாலத்தில் அமிதாப்பச்சன் தமிழில் படம் தயாரித்தபோது, அந்த படத்தை இயக்கியவர்கள்தான் இந்த ஜேடி.ஜெர்ரி இரட்டையர்கள். அதற்கப்புறம் அமிதாப்பச்சன் இன்று வரை தமிழ்நாட்டு பார்டரை மிதிக்கும்போதெல்லாம் அய்யனாரப்பன் கோவில் தாயத்து கயிறை கட்டாமல் காலை தூக்கி வைப்பதேயில்லை. போகட்டும்… இப்போது ஜேடி ஜெர்ரியே இந்த அண்ணாச்சியை “வாங்க ட்ரெயல் பார்க்கலாம்”என்று அழைத்ததாக தெரிகிறது.
எனவே விரைவில் அண்ணாச்சி வழங்கும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. அதென்னய்யா படத்துக்குமா இந்த பேரு வைப்பாங்க என்று கேட்பவர்களுக்கு... ஒரு நினைவூட்டல். ‘இதயம் பேசுகிறது’என்ற புகழ் பெற்ற வார இதழை விலைக்கு வாங்கி ‘சரவணா ஸ்டோர்ஸ்’என்று பெயர் மாற்றி வார இதழாக கடைகளில் தொங்க விடுகிற அளவுக்கு துணிச்சல் மிக்க ஒரே நிறுவனமாக விளங்கியது நம்ம சரவணா ஸ்டோர்ஸ்தானே!?
விளம்பரத்திற்கு விளம்பரமும் ஆனது. படத்துக்கு படமும் ஆனது. நீங்க கலக்குங்க அண்ணாச்சி..!