சென்னையில் ஷாப்பிங் என்றதும், பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'சரவணா ஸ்டார்' என்கிற கடையின் பெயர் தான். வசதி படைத்தவர்கள், நடுத்தர வாதிகள், ஏழ்மையானவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல், அனைத்து பொருட்களும், சற்று விலை குறைவாகவே கிடைப்பது தான் இந்த கடையின் சிறப்பு.

இதுவரை வசந்தன் கோ, லலிதா நகை கடை உரிமையாளராகள், அவர்களுடைய கடை விளம்பத்தாரத்தில் அவர்களே நடித்திருந்தாலும், பேச மட்டுமே செய்தனர். அவர்களிடம் இருந்து தன்னை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி கொண்டு, ஆட்டம், பாட்டம், டான்ஸ், மேக்அப், என  என்ட்ரி கொடுத்தவர் லெஜண்ட் நியூ  சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன்.

இந்நிலையில் இவர் விளம்பரத்தை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர் இயக்கத்தில்  'லெஜெண்ட் சரவணன்' நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், ஆரம்பமாகி உள்ளது.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வட இந்திய மாடல் ஒருவர் ஹீரோயினாக நடிக்கின்றார். இவர் தமன்னா, ஹன்சிகாவையே அழகால் மிஞ்சிவிட்டார் என நெருக்கமான வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற இந்த படத்தில் பூஜையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான, பிரபு, விவேக், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒருவேளை இவர்களும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.