அருளுக்கு ஜோடி யார் ? முதல் ஆளாய் முந்திக்கொண்டு ட்வீட் போட்ட ஹன்சிகா..! 

சரவணா ஸ்டோர் அதிபர் அருளுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிப்பதாக ஒரு சில செய்திகள் வெளிவந்து இருந்தன.

ஆரம்ப காலகட்டத்தில் சரவணாஸ்டோர் நிறுவனர் அருள் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். இவருக்கு முன்னதாக பிரபல நடிகர் நடிகைகளை வைத்து விளம்பரம் எடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அருள் அவர்களே தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார். இது அவருடைய நிறுவனத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்ததோ இல்லையோ அவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது என்று தெரிவிக்கலாம்.

ஹன்சிகா தமன்னா காஜல் அகர்வால் இவர்கள் மூவரில் யாராவது ஒருவர் அருள் எடுக்க உள்ள புது படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளது என பேசப்பட்டு வந்தது. அருள் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை ஏற்கனவே சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் விளம்பர இயக்குனர்களான ஜெட் ஜெர்ரி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் அருளுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவரை தான் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சில செய்திகள் வெளியே வந்தனர். இந்த செய்தி குறித்து நடிகை ஹன்சிகா அவரது ட்விட்டர் பக்கத்தில் "not true" அதாவது இது உண்மையல்ல என பதிவிட்டுள்ளார் இதன் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ஹன்சிகா.