Asianet News TamilAsianet News Tamil

வசனமே கிடையாது.. ஆனால் மிக்ச்சர் சாப்பிட்டே உலக பேமஸ் அடைந்த நாட்டாமை பட நடிகர் - அவர் யார் தெரியுமா?

Nattamai Movie Actor : பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நாட்டாமை திரைப்படம்.

Sarathkumar 1994 Nattamai Movie do you who the micher eating guy is full details ans
Author
First Published Jan 30, 2024, 11:58 PM IST | Last Updated Jan 31, 2024, 12:04 AM IST

பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "நாட்டாமை". சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான அந்த திரைப்படம் அப்போதே 55 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் திரைப்படம். இதில் சரத்குமார் மற்றும் நடிகர் கவுண்டமணிக்கு மட்டுமே 10 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

175 நாட்களுக்கு மேல் ஓடி மெகா ஹிட் ஆன நாட்டாமை திரைப்படம், சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி தனது "சூப்பர் குட் பிலிம்ஸ்" நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இரட்டை வேடங்களில் சரத்குமார் மிக நேர்த்தியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். 

பொய் சொல்லியதை ஒப்புக்கொண்டு.. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!

அதேபோல இந்த திரைப்படத்தில் வரும் நடிகர் கவுண்டமணி அவர்களுடைய காமெடி பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக தனது தந்தையாக நடித்த செந்தில் அவர்களை கலாய்த்து அவர் பேசும் வசனங்கள் இன்றளவும் மிகவும் பிரபலம். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி தனக்காக ஒரு பெண் பார்க்க செல்வார். 

ஆனால் அந்த பெண்ணினுடைய தாய் ஏற்கனவே செந்தில் காதலித்து மணந்த பெண்ணாக இருப்பார். இதனால் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்யமுடியாமல் போய்விடும்.  இதற்கிடையில் ஒருவர் அங்கு அமர்ந்து நடப்பதை பற்றி கலவைப்படாமல் மிச்சர் சாப்பிட்டு கொண்டிருப்பார். அவரை கலாய்த்தும் சில வசனங்களை கவுண்டமணி அவர்கள் பேசி இருப்பார். 

ஆனால் வசனம் எதுவுமே பேசாமல் வெறும் மிக்ச்சர் மட்டும் சாப்பிட்டு இன்றளவும் உலக அளவில் பேமஸ் பெற்ற ஒரு நபர் என்றால் அந்த மிச்சர் சாப்பிடும் நபர்தான். அவர் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமா படங்களில் லைட் மேனாக பணிபுரிந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. அவருடைய மனைவியாக அந்த திரைப்படத்தில் நடித்த பெண் சற்று நிறம் கூடுதலாக இருந்ததால், அவருக்கு கணவன் என்று சொல்லும் அளவிற்கு ஒரு நபரை தனது செட்டில் தேடி இருக்கிறார் ரவிக்குமார். 

இவர் இயல்பாகவே பட்டை போட்டுக்கொண்டு படப்பிடிப்புக்கு வந்ததால், அவரை அமர்ந்து மிச்சர் மட்டும் சாப்பிடுங்கள் போதும், வசனம் எதுவும் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார் ரவிக்குமார். அவரும் மிச்சரை சாப்பிட்டுக் கொண்டே உட்கார்ந்து இருக்கிறார். ஆனால் அது பிற்காலத்தில் மாபெரும் ஹிட்டாகியுள்ளது. தற்பொழுது சென்னையில் ஒரு பூங்காவின் வாசலில் ஜூஸ் கடை ஒன்றை அவர் நடத்தி வருவதாகவும், தற்பொழுது அவருடைய மகன் சினிமாவில் லைட் மேனாக பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தளபதி 69 லோடிங்.. பிரபல தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் விஜய்.. இயக்குனர் யார்? வெளியான அப்டேட் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios